முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளது. இந்நிலையில் காவல் துறை கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட நபர், முதலமைச்சர் வீட்டில் வெடிக்குண்டு வெடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து வெடிக்குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த தொடர்பு எண்ணை வைத்து விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் குன்றிய இளைஞரே ஸ்டாலின் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதே நபர் இதற்கு முன்பு, முன்னாள் முதல்வர் வீடு, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடு, நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மரக்காணத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.