அமெரிக்காவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் | இரண்டு மணி நேரம் நியூயார்க் போலீஸார் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    19
    Wednesday

Main Area

Mainஅமெரிக்காவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் | இரண்டு மணி நேரம் நியூயார்க் போலீஸார்

போலீசார்
போலீசார்

நியூயார்க் மன்ஹாட்டன் நகரில் அதிகாலை 7 மணிக்கு ஒரு பயணி, ஃபுல்டன் தெரு சப்வே ஸ்டேஷனுக்கு அருகில் ஒரு ரைஸ் குக்கரைப் பார்த்து பீதியடைந்துள்ளார். இது பற்றி காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தவுடன், உடனடியாக அந்த பகுதிகளில் இருந்த இரண்டு சப்வே லைன்களையும் ரத்து செய்து, போக்குவரத்தைப் நியூயார்க் போலீஸார் மாற்றி விட்டனர். அதன் பிறகு ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்குரிய பொருளாக காலி ரைஸ் குக்கர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து  நிம்மதி பெருமூச்சு விட்ட நியூயார்க் போலீசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதே நிலையத்தில், மேலும் இன்னொரு ரைஸ் குக்கரும் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த இடத்தில் பதற்றம் நிலவியது. இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக அந்த வழிதடத்தில் போக்குவரத்தை ரத்து செய்து விட்டு ஆராய்ந்த போலீசார், அந்த ரைஸ் குக்கரும் வெடிக்குண்டு எதுவும் இணைக்கப்படாமல் காலியாக இருந்தது நிம்மதியை வரவழைத்தது.

newyork

‘ஆபத்துக்கள் எதுவும் இல்லை’ என்று போலீசார் அறிவித்த சில மணி துளிகளில், ஃபுல்டன் தெருவின் தெற்கு பகுதியில் மூன்றாவதாக இன்னொரு ரைஸ் குக்கர் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘அதிலும் ஆபத்துக்கள் எதுவும் இல்லை’ என்று அறிவித்த நியூயார்க் காவல் துறையைச் சேர்ந்த டெபுடி கமிஷ்னர் ஜான் மில்லர், செல்ஷியாவில் இதே போல் ஒரு குக்கரில் தான் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி செப்டம்பர் 2016ல் குண்டு வெடிக்கப்பட்டது. இம்முறை அப்படி எதுவும் நிகழவில்லை என்றாலும் இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

new york police

முன்னதாக, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில், ஃபுல்டன் தெருவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ரைஸ் குக்கர்களையும் வைத்த நபரின் உருவம் ஒன்றாகவே இருந்ததாகவும், அந்த நபரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.