விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து நடந்த சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஜயகாந்த் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் நடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அதேபோல் சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.