நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

 

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வீடு இருக்கிறது என்பது நான் அறிந்தவையே. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர் ஒருவர் 108 எண்ணுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், ரஜினி வீட்டுக்கு போலீசார் விரைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரது வீட்டில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

அந்த சோதனையின் முடிவில், அவரது வீட்டில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தது என்பது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விடுத்த நபர் தான் மீண்டும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.