முதல்வர் பழனிசாமியின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

முதல்வர் பழனிசாமியின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

முதல்வர் பழனிசாமியின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பிரபலங்களின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. ஒருகட்டத்தில் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி உள்ளது. சேலையூரைச் சேர்ந்த வினோத்குமார் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு குறித்த புகாரை காவல்துறை ஏற்காததால் , தன்னுடைய சொந்த அலைபேசியில் இருந்தே 19 முறை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்நிலையில் முதல்வரின் சென்னை இல்லத்திற்கும் , சேலம் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. 100 அவசர எண்ணுக்கு அழைத்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். தொலைபேசியில் வந்த மிரட்டலையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. முதல்வர் இல்லங்களுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருப்பூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.