நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விக்ரம் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சீயான் விக்ரம் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த சில மாதங்களாகவே பிரபலங்கள் வீட்டிற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்,அஜித், சூர்யாவின் அலுவலகம், விஜயகாந்த், சரத்குமார், தனுஷ் உள்ளிட்ட பலரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இவர்களின் இல்லத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் தான் விக்ரம் இல்லத்திற்கும் மிரட்டல் விடுத்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.