விஜயகாந்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்!

 

விஜயகாந்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர், தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை அபிராமபுரத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் வீட்டில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த தகவலின் பேரில், தனுஷ் வீட்டுக்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் அது புரளி என தெரியவந்துள்ளது.

விஜயகாந்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்!

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். அண்மையில் நடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கும், நடிகர் விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.