நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஊரடங்கு காலத்திலும் திரைத்துறை பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒன்று வந்துள்ளது. அதனை கூறிய உடன் அந்த நபர் இணைப்பை துண்டித்திருக்கிறார்.

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்த புகாரை அடுத்து நடிகர் அஜித் வீட்டுக்கு விரைந்த போலீசார், வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எந்த வெடிகுண்டும் கிடைக்கப்பெறாத நிலையில், அது வெறும் வதந்தி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.