`மனைவி சாப்பாடு கொடுக்கல; அதனால் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்!;- சிக்கிய கணவர் வாக்குமூலம்

 

`மனைவி சாப்பாடு கொடுக்கல; அதனால் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்!;- சிக்கிய கணவர் வாக்குமூலம்

மனைவி சாப்பாடு கொடுக்காததால் அவளை சிக்க வைக்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என்று கைதான வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

`மனைவி சாப்பாடு கொடுக்கல; அதனால் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்!;- சிக்கிய கணவர் வாக்குமூலம்

சென்னை கிரீன்வேஸ் பசுமை வழிச்சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-க்கு மூன்று முறை கால் வந்துள்ளது. அப்போது, பேசிய அந்த நபர், ” முதலமைச்சரின் வீட்டில்தான் வெடிகுண்டு வைத்துள்ளேன். முடிந்தால் அதனை கண்டுபிடித்து எடுங்கள்” என கூறி போனை துண்டித்து வைத்துவிட்டார் அந்த மர்ம நபர்.

இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் இது புரளி என்று காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, செல்போனில் பேசிய நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். நம்பரை ட்ரேஸ் செய்தபோது சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் (33) என்பவருடைய மொபைல் எண் என தெரியவந்தது. இதையடுத்து, சேலையூர் விரைந்து காவல்துறையினர், வினோத் கண்ணனை காவல்நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முதலில் இல்லை என மறுப்பு தெரிவித்தவர், பின்னர் காவல்துறையினர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

`மனைவி சாப்பாடு கொடுக்கல; அதனால் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்!;- சிக்கிய கணவர் வாக்குமூலம்

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட காவல்துறையினருக்கு சோகத்தை ஏற்படும் வகையில் அவரது கதை இருந்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் சேலையூரில் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் என் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலையை இழந்தேன். இதனால், குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். கிடைக்கிற வேலையை மனைவி செய்து வந்தாள். நான் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். பல மாதங்கள் இப்படி சென்றதால் மனைவி எனக்கு சாப்பாடு போடவில்லை. இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மனைவியை பழிவாங்க திட்டம் திட்டினேன். அதன்படி, முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தேன். தற்போது சிக்கிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு இதே போல இரண்டு முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து முதல்வர் வீடு மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் சேலையூர் போலீசார் விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.