“ஹலோ அமிதாப் பச்சன் பங்களாவுல வெடிகுண்டு வச்சிருக்கோம்” – தேடி பார்த்த போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

“ஹலோ அமிதாப் பச்சன் பங்களாவுல வெடிகுண்டு வச்சிருக்கோம்” – தேடி பார்த்த போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ மாதம் ஒரு முறை போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடந்துவிடும். அந்தளவிற்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஒரு கிக் இருக்கிறது. இவர்கள் எப்போதும் தமிழ் படங்களில் அரைத்த மாவை அரைப்பது போலவே ஒரே மாதிரியான டெம்ப்ளெட்டிலேயே மிரட்டல் விடுக்கிறார்கள். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் செய்வது. அவர்களிடம் பிரபலமான நடிகர் ஒருவரின் வீட்டிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பாம் வைத்துள்ளோம் என்பார்கள். தேடிப் பார்த்தால் போலீஸாருக்கு பிம்பிளிக்கி பிளாப்பி என்று டாடா காட்டியிருப்பார்கள்.

“ஹலோ அமிதாப் பச்சன் பங்களாவுல வெடிகுண்டு வச்சிருக்கோம்” – தேடி பார்த்த போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அதுபோன்ற ஒரு சம்பவம் தான் மும்பையில் அரங்கேறியிருக்கிறது. நேற்று இரவு சரியாக 8.53 மணிக்கு மர்ம நபர் ஒருவர் மும்பை மெய்ன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். போன் எடுத்து விசாரிக்கையில் மும்பையின் பிரபலமான சத்ரபதி சிவ்ராஜ் மகராஜ் ரயில்வே ஸ்டேஷன், பைகுலா, தாதர் ஆகிய ரயில் நிலையங்களிலும் ஜூகுவிலுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பங்களாவிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்கள்.

“ஹலோ அமிதாப் பச்சன் பங்களாவுல வெடிகுண்டு வச்சிருக்கோம்” – தேடி பார்த்த போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வழக்கம் போல தாங்கள் யாரென்று சொல்லாமலே போனை கட் செய்துவிட்டனர். உடனே ரயில்வே போலீசாரையும் பாதுகாப்புப் படையினரையும் மும்பை காவல் துறையினர் அலர்ட் செய்தனர். வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்கும் நிபுணர்களோடு மூன்று ரயில் நிலையங்களுக்கும் அமிதாப் பங்களாவிலும் தேடிப் பார்த்திருக்கின்றனர். ஆனால் அங்கே எதுவும் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகே அது போலி மிரட்டல் என்று தெரியவந்திருக்கிறது (அதே டெய்லர் அதே வாடகை). இதற்குப் பின் வழக்கம்போல மிரட்டல் விடுத்த இருவரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.