சைக்கிள் ட்யூப் போல பஞ்சராகும் யூ- ட்யூப் ரகசியங்கள்.. மில்லியன் கணக்கை காமிக்க அள்ளி கொடுத்த பிரபலங்கள் –

 

சைக்கிள் ட்யூப் போல பஞ்சராகும் யூ- ட்யூப் ரகசியங்கள்.. மில்லியன் கணக்கை காமிக்க அள்ளி கொடுத்த பிரபலங்கள் –

பாலிவுட் ராப் பாடகர் பாட்ஷா சமூக ஊடகத்தில் தன்னுடைய பாடலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, போலியான சமூக ஊடக பின்தொடர்பவர்களை உருவாக்க 75 லட்ச ரூபாய் லஞ்சம் ஒரு ஏஜென்சிக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார் .

சைக்கிள் ட்யூப் போல பஞ்சராகும் யூ- ட்யூப் ரகசியங்கள்.. மில்லியன் கணக்கை காமிக்க அள்ளி கொடுத்த பிரபலங்கள் –
பாலிவுட்டில் மிக பிரபலமான பாடகி பூமி திரிவேதி சில மாதங்களுக்கு முன்பாக சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களை போலியாக உருவாக்கி மிகப்பெரிய மோசடி நடைபெறுவதை அம்பலப்படுத்தினார் .அதற்கு பிறகு பாலிவூட்டில் பல பிரபலங்கள் இப்போது பொலிஸாரின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர் .பல நடிகர்,நடிகைகள் ,விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடகர்கள் போன்ற 176 பேர் ஒரு ஏஜென்சியிடம் பணம் கொடுத்து போலியாக மில்லியன் கணக்கான பார்வையாளர்களை உருவாக்கிய மோசடியில் சிக்கியுள்ளனர் .
இந்நிலையில் பிரபல ராப் பாடகர் பாட்ஷா சமீபத்தில் தன்னுடைய ஆல்பம் ஒன்றை வெளியிட்டார் ,அது ஒரே நாளில் 7.5 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது ,இது உண்மையா என்றுசைபர் க்ரைம் போலீசார் விசாரித்தபோது ,அப்படி அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை போலியாக காமிக்க பாஷா 75லட்ச ரூபாய் லஞ்சத்தை ஒரு ஏஜென்சிக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .ஆனால் கூகுள் இந்த தகவலை மறுத்துள்ளது ,இன்னும் போக போக பாட்ஷா வாக்குமூலம் வழியாக பல பாலிவூட் பிரபலங்கள் இந்த மோசடியில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது .

சைக்கிள் ட்யூப் போல பஞ்சராகும் யூ- ட்யூப் ரகசியங்கள்.. மில்லியன் கணக்கை காமிக்க அள்ளி கொடுத்த பிரபலங்கள் –