darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



தமிழர்களுக்கு இந்தி வேணாம், நாமதான் தமிழ் கத்துக்கணும், - பாலிவுட் ஹீரோ

Stop Hindi Imposition
Stop Hindi Imposition

மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கை தேவை என்ற ஆலோசனை இடம்பெற்றதும், அதற்கெதிராக தமிழகம் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ததும், உடனடியாக மத்திய அரசு பின்வாங்கியதும் பழைய செய்தி. இப்போது லேட்டஸ்ட்டாக இந்தி பெல்ட்டில் இருந்து தமிழுக்கு ஆதரவாக ஒரு குரல் அதுவும் பாலிவுட் நடிகரிடமிருந்து. விக்கி டோனர் புகழ் ஆயுஷ்மன் குரானா தனது டிவிட்டர் பக்கத்தில் "வேற்று நாட்டு மொழிகளான பெர்சிய மற்றும் உருது மொழிகளின் கலப்பில் உருவான இந்தியை விடவும், இந்தியாவிலேயே கருவாகி உருவாகி ஆல விருட்சமாகி இருக்கும் தமிழ்தான் இந்திய மொழி" என பின்னி பெடலெடுத்துள்ளார். 

Aayushman Khurrana

இந்தி மொழியை திணிப்பது குறித்த தனது ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டியுள்ள குரானா மேலும் கூறியுள்ளதாவது: "உங்களது மொழியை விரும்புவது நல்ல விஷயம்தான். ஆனால் நம்ம மொழி மட்டும்தான் சிறந்தது என்ற எண்ணம் தவறானது மட்டுமல்ல. அது ஆபத்தானதும் கூட. இந்தியை கொண்டு போய் எப்படி தென் இந்தியாவிலும்,நாம் கட்டாயப்படுத்த முடியும். "தென்னிந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியதையும் நாம் போற்றவேண்டும். இந்தி அவர்களுக்கு அந்நிய மொழி. அதை அவர்களின் மேல் திணிக்கக்கூடாது, ஒரு கலாச்சரைத்தை இன்னொரு கலாச்சாரத்தோடு திணிப்பது, பன்மைத்துவமான நாட்டின் ஒற்றுமையை சீற்குலைப்பதே ஆகும்.

சமஸ்கிருதத்தைவிட தமிழே பழமையான மொழி என கடந்த வருடம் பிரதமர் மோடி தெரிவித்த கருத்தையே கடுமையாக எதிர்த்த வட இந்தியர்கள், வளர்ந்துவரும் நடிகரான குரானாவை விட்டுவைப்பார்களா என்ன? குரானாவை கடுமையாக சாடி ட்விட்களை குவித்துவருகின்றனர் வட இந்திய மொழி வெறியர்கள்! விக்கி டோனர் படம் மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. இப்போது அப்படத்தை தமிழில், தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்துவருகிறார்கள் என்பது கொசுறு.

2018 TopTamilNews. All rights reserved.