நடிகையை பாலியல் தொந்தரவு; காக்கி சட்டை பட வில்லன் கைது!

 

நடிகையை பாலியல் தொந்தரவு; காக்கி சட்டை பட வில்லன் கைது!

படப்பிடிப்பின் போது சக நடிகையை துன்புறுத்தியதாக பிரபல நடிகர் விஜய் ராஸை மகாராஷ்ட்ரா போலீஸ் அதிரடியாக கைது செய்தது.

நடிகையை பாலியல் தொந்தரவு; காக்கி சட்டை பட வில்லன் கைது!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். பாலிவிட்டில் பிரபல நடிகரான இவர் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து மஹாராஷ்டிரா போலீஸார் விஜய் ராஸை கைது செய்தனர். விஜய் ராஸ் ராம்நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வித்யா பாலன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பிலேயே விஜய் தாஸ் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

விஜய் ராஸ் 50 க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். வெல்கம்’, ‘டெல்லி பெல்லி’, ‘தேத் இஷ்கியா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘பாம்பே டு கோவா’, ‘கம்பெனி’ மற்றும் ‘மான்சூன் உள்ளிட்ட படங்களில் விஜய் ராஸ் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய் ராஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ‘க்யா தில்லி க்யா லாகூர்’ என்ற படம் வெளியானது.