‘டர்டி பிக்சர்’ பட நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு!

 

‘டர்டி பிக்சர்’ பட நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு!

‘டர்டி பிக்சர்’ படத்தில் நடித்த நடிகை ஆர்யா பானர்ஜி காலமானார். அவருக்கு வயது 33 .

1980, 90களில் கனவு நாயகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சிக்கு பெயர் போன இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பலரின் மனதை கொள்ளைகொண்ட சில்க் ஸ்மிதா 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

‘டர்டி பிக்சர்’ பட நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு!

இதையடுத்து இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு டர்டி பிக்சர் என்ற பெயரில் படமானது. இதில் சில்க்ஸ்மிதாவாக வித்யா பாலன் நடித்திருந்தார். இதற்கான வித்யா பாலனுக்கு விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அப்படத்தில் நடித்த அனைவருக்கும் இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

‘டர்டி பிக்சர்’ பட நடிகை மர்மமான முறையில் உயிரிழப்பு!

இந்நிலையில் ‘டர்டி பிக்சர்ஸ்’ படத்தில் நடித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆர்யா பானர்ஜி நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஆர்யா பானர்ஜி உடலை கைப்பற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்ததுடன் உயிரிழப்பு குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.