ரசாயன ஆலையில் திடீரென வெடித்து சிதறிய பாய்லர்… 3 தொழிலாளர்கள் பரிதாப மரணம்!

 

ரசாயன ஆலையில் திடீரென வெடித்து சிதறிய பாய்லர்… 3 தொழிலாளர்கள் பரிதாப மரணம்!

கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கிருந்த தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்துள்ளனர்.

ரசாயன ஆலையில் திடீரென வெடித்து சிதறிய பாய்லர்… 3 தொழிலாளர்கள் பரிதாப மரணம்!

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுள் 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், காலைப் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்ததும் பாய்லர் அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது. காயமடைந்தோரை மீட்க சென்ற சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாம்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்பட்டதால் தான் இந்த விபத்து நேர்ந்ததாக உயிரிழந்தோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். தீ விபத்தால் ஆலையில் இருந்து கரும்புகை வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.