Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் அவித்த முட்டை,ஆம்லெட்,ஆப்பாயில் – புதிய ஆபத்து

அவித்த முட்டை,ஆம்லெட்,ஆப்பாயில் – புதிய ஆபத்து

உங்களுக்கு “கோழி முட்டை’ என்றால் கொள்ளை பிரியமா..? ஜாக்கிரதையாக இருங்கள்.வாரம் 7 முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையைச் சாப்பிட்டால் ஆபத்து அதிகமாம். இந்த ஆய்வை நிகழ்த்திய

ஹார்வேர்ட் குழுவினர் சுமார் 27 ஆண்டுகளாக, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவைச் சொல்லியிருக்கின்றனர்.
இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.


இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது.
முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

நவராத்திரி ஐந்தாம் நாள்: சகல ஐஸ்வரியத்தையும், புத்திரபாக்கியத்தையும் தருவாள் தேவி ஸ்கந்த மாதா!

அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் நவராத்திரி உற்சவ நாட்களில் பராசக்தியே துர்க்கையாகி தீமைகளை அழிக்கிறாள். மகாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும், பக்தியையும் அளிக்கின்றாள். புத்தி, பக்தி, சித்தி...

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் பகுதியை மேம்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்படும்.ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை...

வலை விரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வடிவேலு “டாடா பை..பை..”

தமிழகத்தில் கடந்த 2011- ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்தான் அதிக பட்சமாக நடிகர், நடிகையர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நடிகர்கள் ராமராஜன், நெப்போலியன், வாகை சந்திரசேகர், வடிவேலு, சிங்கமுத்து, குண்டு கல்யாணம்,...

பாகிஸ்தானில் டிக்டாக் தடை நீக்கம் – காரணம் இதுதான்

உலகளவில் ஒரு ஆப் இத்தனை வேகத்தில் பரவும் என்றும், அத்தனை கோடி பேர் டவுண்ட்லோடு செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு குறுகிய காலத்தில் புகழ்பெற்றது டிக்டாக் ஆப்.
Do NOT follow this link or you will be banned from the site!