சாலையில் மயங்கி விழுந்து பலியான நபர்… கொரோனா அச்சத்தால் உடலை குப்பை வண்டியில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள்!

சாலையில் மயங்கி விழுந்து பலியான நபர்… கொரோனா அச்சத்தால் உடலை குப்பை வண்டியில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள்!

உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்வர். இவர் தனது சொந்த வேலைக்காக அரசு அலுவலகத்திற்கு சென்ற போது சாலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் இறந்தவர் உடலை போலீசார் கண்முன்னே குப்பை வண்டியில் எடுத்து சென்றுள்ளனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

சாலையில் மயங்கி விழுந்து பலியான நபர்… கொரோனா அச்சத்தால் உடலை குப்பை வண்டியில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள்!

கொரோனா அச்சம் காரணமாக மாநகராட்சி ஊழியர்கள், போலீசாரும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் இறந்தவர் உடல் அருகே வராமல் இதுபோன்று செய்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 மாநகராட்சி ஊழியர்களும், 3 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாலையில் மயங்கி விழுந்து பலியான நபர்… கொரோனா அச்சத்தால் உடலை குப்பை வண்டியில் எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள்!

இதுகுறித்து கூறியுள்ள பல்ராம்பூர் காவல் அதிகாரி ஒருவர், ” இது மனிதாபிமானமற்ற செயல். உடல்களை கையாள்வதற்கென்று தனி வழிமுறைகளை வைத்திருக்கிறோம். கொரோனா அச்சத்தால் போலீசாருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.