திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு! அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது கல்வலை கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள காட்டுப் பகுதியில் 7 வயதுள்ள ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர் ஒரு டிரம்மில் சிறுமியைத் தூக்கி வந்து போட்டதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கின்றாராம். சிறுமியின் உடல் அங்கிருந்த ஓடையின் ஓரத்தில் கிடந்திருக்கிறது.

அந்தச் சிறுமியின் உடல் மதியம் 1 மணியளவில் அங்கு கிடப்பது காவல் துறையினருக்குத் தெரியவந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அந்தச் சிறுமி ஏன் கொலை செய்யப்பட்டார்… பாலியல் வன்முறைகள் அவர் மீது நடத்தப்பட்டதா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும். சிறுமி கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருகிறார்கள். இந்தக் கொலை தொடர்பாக காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

சமீபமாக சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகளவில் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களும் பெரும்பாலும் அந்தச் சிறுமிக்கு தெரிந்த நபர்களால்தான் நடத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் நெருங்கிய உறவினர்கள் மூலமே நடக்கின்றன என்பதே பெரும் கேவலமான செய்தி. இம்மாதிரியான வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசும் காவல் துறையும் மட்டுமல்ல சமூக அக்கறையுள்ளவர்களும் இணைந்து களப்பணியாற்ற வேண்டியது அவசியம்.

Most Popular

‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...

பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

ஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!