இலங்கைக் கடற்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்கள் தாயகம் வருகின்றன!

 

இலங்கைக் கடற்படை தாக்குதலில்  உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்கள் தாயகம் வருகின்றன!

இலங்கைக் கடற்படை தாக்குதலில்  உயிரிழந்த தமிழக மீனவர்கள் உடல்கள் இன்று தாயகம் வருகின்றன.

இலங்கைக் கடற்படை தாக்குதலில்  உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்கள் தாயகம் வருகின்றன!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சார்ந்த சாம்சன் டார்வின் (28) கோட்டைபட்டினம் அருகே மீன்பிடிக்க கடந்த 19 ஆம் தேதி சென்றுள்ளனர். பின்னர் இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணிக்காக இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் வேகமாக மோதியுள்ளனர். இதில் படகு கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலில் மூழ்கினர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில், 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. பின்னர் மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கைக் கடற்படை தாக்குதலில்  உயிரிழந்த தமிழக மீனவர்களின் உடல்கள் தாயகம் வருகின்றன!

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த 4 மீனவரின் உடல்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கப்பலில் புறப்பட்டன. காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மணமேல்குடி அருகே இந்திய கடலோர படையிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகின்றன. சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையினரிடம் மீனவர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டவுள்ளது. நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்ட பின் மீன்பிடி விசைப் படகுகளில் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் 4 உடல்களும் ஒப்படைக்கப்படுகின்றன.