கங்கை நதியில் சடலங்கள் – உ.பி., பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்

 

கங்கை நதியில் சடலங்கள் – உ.பி., பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்

கங்கை நதியில் சடலங்களை வீசுவதை தடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேசம், பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கங்கை நதியில் சடலங்கள் – உ.பி., பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்

இந்துக்கள் புனித ஸ்தலமாக கருதப்படும் கங்கை நதியில் உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் கொரோனா சடலங்கள் மிதப்பது போன்ற காட்சிகளும், அதனை பறவைகள் கொத்தி இழுப்பது போன்ற காட்சிகளும் ஊடகங்களில் வெளியானது. இது நோய் பரவலை மேலும் அதிகப்படுத்துவதுடன் கங்கை நதியை மாசுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இந்த சடலங்கள் குறித்த விளக்கத்தை இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் கோவிட் -19 அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பாதுகாப்பாக கையாளப்படுவது மற்றும் கண்ணியமான முறையில் தகனம் செய்வதையும் கண்காணிக்க வேண்டுமென்றும், கங்கையில் வீசப்பட்டிருக்கும் சடலங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.