வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு படகு, கார் வசதி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி-யின் செயல்…

 

வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு படகு, கார்  வசதி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி-யின் செயல்…

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த, பொதுமக்களுக்கு படகு வசதி ஏற்படுத்தி தந்த எஸ்.பி., ஜெயக்குமாரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக முத்தம்மாள் காலனி, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அத்தியாவசி பொருட்கள் வாங்கவும், பணிக்கு செல்லவும் முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து அந்தபகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி செய்யக் கோரிக்கை விடுத்தனர்.

வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு படகு, கார்  வசதி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி-யின் செயல்…


இதனை அடுத்து முத்தம்மாள் காலனிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், மீனவர்களின் உதவியோடு படகு மூலம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுத்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 10-க்கும் மேற்பட்ட காவலர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்ட அவர், மக்கள் பயன்பாட்டிற்காக காவல் துறை வாகனம் ஒன்றையும் அங்கு நிறுத்த உத்தரவிட்டார். எஸ்.பியின் இந்த மனிதாபிமானம் மிக்க செயலால் நெகிழ்ச்சி அடைந்துள்ள அந்த பகுதி பொதுமக்கள், அவருக்கு நன்றியை தெரிவித்துகொனண்டனர்.