இரத்த தானம் பண்ணுங்க.. வீட்டுக்கு 1 கிலோ சிக்கன் அல்லது பன்னீர் கொண்டு போங்க.. மும்பையை கலக்கும் போஸ்டர்

இரத்த தானம் பண்ணுங்க.. வீட்டுக்கு 1 கிலோ சிக்கன் அல்லது பன்னீர் கொண்டு போங்க.. மும்பையை கலக்கும் போஸ்டர்

பிரஹன்மும்பை மாநகராட்சியில் (பி.எம்.சி.) இரத்த தானம் செய்பவர்கள் ஒரு கிலோ சிக்கன் அல்லது பன்னீர் வாங்கி செல்லலாம் என்ற போஸ்டர் பலரையும் ஈர்த்துள்ளது.

மும்பை மாநகராட்சியில் உறுப்பினராக இருப்பவர் சமதன் சர்வங்கர். இவர் சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதா சர்வங்கரின் மகன். டிசம்பர் 16ம் தேதியன்று புதிய பிரபாதேவியில் உள்ள ராஜபாவ் சால்வி மைதானத்தில் இரத்த தான முகாம் ஒன்றை நடத்த சமதன் சர்வங்கர் ஏற்பாடு செய்துள்ளார். இரத்த தானம் முகாம் தொடர்பாக மாநகராட்சி பகுதியில் அவர் ஒட்டியிருந்த போஸ்டர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இரத்த தானம் பண்ணுங்க.. வீட்டுக்கு 1 கிலோ சிக்கன் அல்லது பன்னீர் கொண்டு போங்க.. மும்பையை கலக்கும் போஸ்டர்
இரத்த தான போஸ்டர்

இரத்த தானம் செய்யுங்க, வீட்டுக்கு ஒரு கிலோ சிக்கன் அல்லது பன்னீர் கொண்டு செல்லுங்க என்று அந்த போஸ்டரில் வித்தியாசமாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சமதன் சர்வங்கர் கூறுகையில், பொதுவாக இரத்த தான முகாம்கள் ஒரு தீவிரமான விஷயம். இரத்த தானம் செய்பவர்கள் இரத்தத்தை தானம் செய்து விட்டு, சான்றிதழ் பெற்று வீட்டுக்கு செல்வார்கள்.

இரத்த தானம் பண்ணுங்க.. வீட்டுக்கு 1 கிலோ சிக்கன் அல்லது பன்னீர் கொண்டு போங்க.. மும்பையை கலக்கும் போஸ்டர்
இரத்த தானம்

ஆனால் நாங்கள் ஜாலியான சந்தோஷமான இரத்த தான முகாமை நடத்த நினைத்தோம். இரத்த தானம் செய்ய மக்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தொற்றுநோய் மத்தியில் எல்லோரும் கவலையாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு (இரத்த தானம் செய்பவர்கள்) உற்சாகத்துக்கு சில காரணங்களையும் கொடுக்க முடிந்தது. உலக சுகாதார அமைப்பின் வலை தளத்தில், கோழி மற்றும் பால் பொருட்கள் புரசச்சத்து மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரம் என்ற தகவலை படித்தபோது கோழி பன்னீர் மற்றும் பன்னீர் வழங்கும் எண்ணம் ஏற்பட்டது. எனவே இரத்த தானம் செய்பவர்கள் அனைவருக்கும் கோழி அல்லது பன்னீர் கொடுக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.