ப்ளூ டிக் காட்டியும் நோ ரிப்ளே – இந்த 8 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்… ரிலாக்ஸ்

 

ப்ளூ டிக் காட்டியும் நோ ரிப்ளே – இந்த 8 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்… ரிலாக்ஸ்

உலகமே ஒரு கிராமம் போல ஆகிவிட்டது என்று சொல்வது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்த்துதான். ஆம், இந்த நொடியில் அமெரிக்காவிலிருந்து நாம் செய்வதைப் பார்க்க முடியும். அவர்கள் சொல்லும் செய்தியைக் கேட்க முடியும்.

உலகின் எந்த மூலையிலிருந்தும் எவரையும் தொடர்புகொள்ளும் வசதி பெருகி விட்டது. வீடியோ கால் என்பதெல்லாம் இப்போது ரொம்பவே சகஜமாகி விட்டது.

தொழிநுட்பங்கள் வளர வளர தொடர்புகொள்ளல் எளிமையானதுபோலவே சிக்கல்களும் பெருகத் தொடங்கிவிட்டன. உடனே போனை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது. அதிலும் மொபைல் எனும் போது, அழைப்பது யார் என்று தெரிந்தும் எடுக்க வில்லையா… என்று கோபத்தில் உச்சத்திற்குச் செல்லும் பலரையும் நாம் பார்ப்பதுண்டு.

ப்ளூ டிக் காட்டியும் நோ ரிப்ளே – இந்த 8 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்… ரிலாக்ஸ்

வாட்ஸப்பில் நீங்கள் ஒரு செய்தியை ஒருவருக்கு நீங்கள் அனுப்பிவிட்டீர்கள். அதை அவர் பார்த்துவிட்டார் என்பதற்கு அடையாளமாக ப்ளு டிக் வரும். அந்த ப்ளூ டிக் பார்த்தவுடனே, செய்தி அனுப்பியவரின் மனநிலை என்னவாக இருக்கிறது என்றால், உடனே அவர் ரிப்ளே டைப் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதே. அப்படி வரவில்லை என்றால் அவமதித்து விட்டதாக மன உளைச்சல் ஆகிறார்கள்.

ப்ளூ டிக் வந்தும் நீண்ட நேரம் ரிப்ளே வரவில்லையா… டென்ஷன் வேண்டாம். ரிப்ளே வராததற்கு உண்மையான் சில காரணங்களும் இருக்கலாம். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ப்ளூ டிக் காட்டியும் நோ ரிப்ளே – இந்த 8 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்… ரிலாக்ஸ்
  1. நீங்கள் அனுப்பிய மெசேஜ் படித்ததும், உடனே பதில் அனுப்பும் சூழலில் இல்லாமல் அவர் இருக்கலாம். உதாரணமா, மீட்டிங் அல்லது தியேட்டர் போன்ற இடங்களில் இருக்கலாம்.

2. நீங்கள் அனுப்பிய மெசேஜ்க்கு ஏதேனும் ரெஃப்பர்ன்ஸைப் பார்த்து ரிப்ளே அனுப்பலாம் எனத் தேடிக்கொண்டிருக்கலாம்.

3 உங்களின் மெசேஜ்க்கு டெஸ்டாக ரிப்ளே செய்ய முடியாமல் இருக்கலாம். அதனால், நேரில் அல்லது போன் செய்துகொள்ளலாம் என்று ஒத்தி வைத்திருக்கலாம்.

ப்ளூ டிக் காட்டியும் நோ ரிப்ளே – இந்த 8 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்… ரிலாக்ஸ்

4 உங்களின் மெசேஜ் படித்ததும் பதில் அனுப்புவதற்குள் அவரின் இணைய டேட்டா அளவு முடிந்து போயிருக்கலாம்.

5 நீங்கள் மெசேஜ்ஜில் கேட்டிருக்கும் கேள்வி தர்மசங்கடமாக உணர்ந்திருக்கலாம். அதை நீங்களும் உணர வேண்டியது அவசியம்.

6 அவர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கலாம். சிக்னலில் நிற்கையில் போன் வந்திருக்கும். அதற்கு அரை நிமிடத்தில் பேசி கட் பண்ணியிருப்பார். அப்போது உங்களின் மெசேஜ் சென்றிருக்கும்; பார்த்திருப்பார். ஆனால், ரிப்ளே செய்ய முடியாமல் இருந்திருக்கலாம்.

7 பின்னிரவு நேரம் எனில், தூக்க விழிப்பில் மெசேஜ்ஜைப் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், உடனே ரிப்ளே செய்ய முடிந்திருக்காது.

ப்ளூ டிக் காட்டியும் நோ ரிப்ளே – இந்த 8 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்… ரிலாக்ஸ்

8 இவையெல்லாம் கடந்து இன்னொரு விஷயமும் இருக்கிறது. பல வீடுகளில் குழந்தைகள்தாம் மொபைலைக் கையில் வைத்து கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், மெசேஜ் வந்த நோட்டிபிகேஷன் திரையில் வந்ததும் அதை தள்ளுவதற்குப் பதில் ஓப்பன் பண்ணியிருந்திருக்கலாம். அதை எப்படி மாற்றுவது எனத் தெரியாமல், உங்கள் மேசேஜ்ஜை ஓப்பன் செய்திருக்கலாம். அதனாலும் ப்ளூ டிக் காட்டியிருக்கும். திரும்பவும் உங்கள் நண்பர் கையில் மொபைல் சென்றபிறகே அவர் ரிப்லே அனுப்ப முடியும் அல்லவா… பொறுமை அவசியம்.

இன்னும் நிறைய காரணங்கள் இருந்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள் இருக்கலாம். அதனால், ஒரு மெசேஜ் அனுப்பியதும் அதற்கான ரிப்ளேக்கு குறிப்பிட்ட நேரம் காத்திருங்கள். தவறில்லை. மாறாக தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவரைத் துன்புறுத்துவது போலாகி விடும்.  

ப்ளூ டிக் காட்டியும் நோ ரிப்ளே – இந்த 8 காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்… ரிலாக்ஸ்

கடிதம் எழுதி வாரக்கணக்கில் காத்திருந்தனர் முந்தைய தலைமுறையினர். மெயில் அனுப்பி நாள் கணக்கில் காத்திருந்தனர் ஐந்தாண்டுகளுக்கு முன் வரை. மெசேஜ் அனுப்பி ஒரு மணிநேரம் காத்திருக்க மாட்டோமா நாம்.

இந்த 8 காரணங்கள் இல்லாமலும் ஒன்று இருக்கிறது. உங்களுக்கு ரிப்ளே பண்ண விரும்ப வில்லை. அதை புரிந்துகொண்டு விலகி விடுங்கள் அல்லது உங்கள் வட்டத்திலிருந்து அவரை விலக்கி விடுங்கள்.