நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள், அனைவருக்கும் தடுப்பூசி போட ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும்

நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள், அனைவருக்கும் தடுப்பூசி போட ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும்

நவம்பர் வரை ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கவும், அனைவருக்கும் தடுப்பூசி போடவும் மத்திய அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும் என்று புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகை வரை, ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும். நவம்பர் மாதம் வரை செயல்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்தின் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்.

நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள், அனைவருக்கும் தடுப்பூசி போட ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும்
ரேஷன்

மேலும்,18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் 21ம் தேதி முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம். இதற்காக தனியார் மருத்துவமனைகள் சேவை கட்டணமாக ரூ.150 மட்டுமே வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள், அனைவருக்கும் தடுப்பூசி போட ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும்
கொரோனா தடுப்பூசி

பிரதமரின் மோடியின் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும் என்று புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் வரை ஏழை மற்றும் பிற தகுதியுள்ள குழுக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ரூ.70 ஆயிரம் கோடியும், அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடுவதற்காக கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியும் தேவைப்படும் என்று புளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.