Home தமிழகம் "சசிகலா உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது" : விக்டோரியா மருத்துவமனை

“சசிகலா உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது” : விக்டோரியா மருத்துவமனை

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"சசிகலா உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது" : விக்டோரியா மருத்துவமனை
"சசிகலா உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது" : விக்டோரியா மருத்துவமனை

சசிகலா கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலாவுக்கு தொற்று குறைந்த நிலையில் அவர் உணவு உட்கொண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. நேற்று அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

"சசிகலா உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது" : விக்டோரியா மருத்துவமனை

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. சசிகலா 4வது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார். சசிகலா உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது; நேற்று ரத்த அழுத்த மாறுபாடு இருந்த நிலையில், இன்று உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4ஆண்டுகாலம் இருந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி சிறைவாசம் முடிந்து விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

"சசிகலா உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது" : விக்டோரியா மருத்துவமனை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. நடந்து...
- Advertisment -
TopTamilNews