வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு மீண்டும் 30 விநாடிகள் வரை நீட்டிப்பு!

    0
    75

    இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது. வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது. இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் தன்வசம் வாங்கிய பிறகு வாட்ஸ் அப்பில் பல பல புதிய அப்டேட்ஸ்கள் வந்து பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது.

    whatsappஇந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடக்கும் மக்கள் அதிக நேரத்தை, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களிலேயே கழிக்கின்றனர். இதனால் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் பதிவிடப்படும் வீடியோவின் அளவை 15 விநாடிகளில் இருந்து 30 விநாடிகளாக மீண்டும் உயர்த்தியுள்ளது. வாட்ஸ் அப். வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய நேர அளவை பயன்படுத்தலாம் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.