Tamilnadu #10thResults: 45,338 மாணவர்கள் தோல்வி; பெற்றோர்கள் கவனத்திற்கு?!..

    0
    2790
    10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

    12-ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம், இதிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத் தேர்வு இயக்குநரகம் நடத்தியது. கடந்த மார்ச் 14-ஆம் தேதி துவங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 29-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று தேர்வு முடிகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை  tnresults.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். இதில் 95.2% மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    sdzf

    12-ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம், இதிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இந்த தேர்வில் 45,338 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களுக்கான துணைத் தேர்வு வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தொடக்கக்கல்வி அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

    10

    தேர்வு முடிவுகள் வெளியானால் தற்கொலை செய்தி வருவதும் வழக்கமாக இருந்தது. தற்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. எனவே தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆறுதலாக இருங்கள். துணைத் தேர்வு எழுதி வெற்றிபெறலாம் என ஊக்கப்படுத்துங்கள். வசை பாடியோ, காயப்படுத்தியோ அவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்காதீர்கள்.