#Seemanism: இந்த மண் என் கையில் சிக்குச்சு நீ செத்த – Kgf version video

    0
    9
    கேஜிஎப் - சீமான்

    நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். திராவிடக் கட்சிகள் மட்டுமல்லாது பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான், அதனால் இளைஞர்களின் ஆதரவு அக்கட்சிக்கு அதிகமாகியுள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு சமூக வலைதளங்களில் முன்பை விட ஆதரவு அதிகமாகி வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சால் இளைஞர்கள் பலரும் ஈர்க்கப்படுகின்றனர். அப்படி சீமான் பேசிய ஒரு வீடியோ kgf பட பாடலுடன் எடிட் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

    seeman

    மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. நாம் தமிழர் கட்சியும் தங்கள் பிரச்சார வேலைகளில் பிஸியாக உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். திராவிடத்தால் வீழ்ந்தோம் என சீமான் ஆதரவாளர்கள் முழங்குகின்றனர்.

    seem

    நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். திராவிடக் கட்சிகள் மட்டுமல்லாது பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான், அதனால் இளைஞர்களின் ஆதரவு அக்கட்சிக்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் சீமான் பேசிய காட்சி ஒன்றினை Kgf (கேஜிஎப்) படத்தின் பாடலுடன் எடிட் செய்து டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

    கேஜிஎப் திரைப்படத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் அடிமையாக இருக்கும் பணியாட்களுக்கு ஆதரவாய் கதாநாயகன் சண்டையிடும் போது இந்த பாடல் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.