#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி

    18
    Meera mithun

    சர்ச்சை நாயகி மீரா மிதுன் கடந்த மாதம் 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஐ எம் வாட்சிங் என பதிவிட்டிருந்தார்.

    சர்ச்சை நாயகி மீரா மிதுன் கடந்த மாதம் 12ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்தான் தமிழகத்திற்கான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. ஐ எம் வாட்சிங் என பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. டெல்லியில் முறையாக தேர்வு எழுதிதான் வாங்கினேன் என விளக்கமளித்திருந்தார். அதுமட்டுமின்றி கடந்த மாதம் நடைபெற்றப் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மீரா மிதுன்,   டிசம்பர் மாதம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். 

    Meera

    தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியிலிருந்து இன்று முதல் மீராமிதுன் நீக்கப்படுவதாகவும், மோசடி வழக்குகள் உள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

    இந்நிலையில் மீரா மிதுன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில்”நான் சொல்ற வரைக்கும் வதந்திகளையும், போலியாக வரும் செய்திகளையும் நம்ப வேண்டாம். இன்னும் நான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் இருக்கிறேன்” என மீண்டும் அவருடைய அடையாள அட்டையுடன் பதிவிட்டுள்ளார். 

    மீரா

    இந்நிலையில் டாப் தமிழ் நியூஸ் செய்தியாளர் ஆனந்த், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி பிரேம் என்பவரை தொடர்பு கொண்டு பேசியபோது, “அந்த செய்தி வதந்தி அல்ல. உண்மைதான். மீராவை பற்றி தமிழக காவல்துறையிடம் விசாரித்தபோது அவர் மீது நிறைய மோசடி வழக்குகள் இருந்தது தெரியவந்தது. அதனால் அவரை அந்த பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். இந்த பொறுப்பில் பணியாற்ற அனைவருக்கும் உரிமை உண்டு. எந்த ஒரு தேர்வு இதற்கு கிடையாது. சட்டவிதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்ட  எந்த ஒரு நபரும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியாற்ற முடியும். குறிப்பாக இத்துறையில் பணியாற்றும் நபர் மீது எந்த வழக்குகளும் இருக்கக்கூடாது” என தெரிவித்தார். 

    மீரா

    பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுளில் anti corruption commission of tamilnadu என டைப் செய்தாலே மீரா மிதுன் பற்றிய செய்தி வரும் அளவிற்கு இந்த செய்தி வைரலாகிவருகிறது.  இந்நிலையில் மீரா மிதுனின் பதவி பறிக்கப்பட்டும் இது பொய் என, அவர் போராடிவருகிறார். மீரா மிதுனின் இந்த மோசடிகளை உடனுக்குடன் செய்தி மற்றும் வீடியோவாக வெளியிட்டதால் டாப் தமிழ் நியூஸின் ட்விட்டர் பக்கத்தையும் மீரா மிதுன் முடக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.