BREAKING: கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

    0
    9
    ரஜினி, கமல்ஹாசன்

    நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும்,  அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இணைந்து நடித்தால் நன்றாகதான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தாலும் அது நடக்காது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ரஜினி, கமல் இருவரும் தற்போது அரசியலில் குதித்திருந்தாலும், திரைத்துறையின் மீது கவனம் செலுத்திவருகின்றன. ரஜினி, தர்பார் படத்தின் வெளியீட்டிலும், இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனும் பிஸியாகவே இருக்கின்றன. சமீபத்தில் கமலின் 60வருட திரையுலக சேவைக்காக பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இணைந்து பயணிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்தநிலையில் இருவரும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தன… ஆனால் உண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் அந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்கவிருப்பதாக நம்ப தகுந்த இடத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.