9 ஆம் வகுப்பு மாணவிகளிடம்  ஆபாச வீடியோக்களை காட்டி துன்புறுத்திய பள்ளி தாளாளர்! 

  0
  12
  School

  கோவையில் மாணவிகளிடம் ஆபாச வீடியோ காட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

  கோவை அடுத்த காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மேரி பள்ளியில் தாளாளர் ஒருவர் 9 ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். உடனடியாக மாணவிகள் பெற்றொரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள்  பள்ளியை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  பள்ளி

  தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையில் தாளாளர் மரிய ஆண்டனிராஜ் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளிடம் மொபைலில் ஆபாச வீடியோ காட்டுவது, வற்புறுத்தி பாலியல் துன்புறுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இதையடுத்து  தாளாளர் மரிய ஆண்டனிராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.