85 வயதில் ஓய்வு பெற்ற வெஸ்ட்இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்..60 வருடங்கள்..7000 விக்கெட்டுகள்

  0
  4
  சிசில் ரைட்

  தனது 85வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சிசில் ரைட்.

  வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான ஜமைக்காவை சேர்ந்த சிசில் ரைட் என்பவர் 1970 மற்றும் 80களில் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான்களான ஜோயல் கார்னர், விவியன் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ் ஆகியோரை விட மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் சர்வதேச வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இவர் ஆடவில்லை என்பதனால்  இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் இவரால் இடம்பெற முடியவில்லை.

  தனது 85வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சிசில் ரைட்.

  cecil wright

  வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான ஜமைக்காவை சேர்ந்த சிசில் ரைட் என்பவர் 1970 மற்றும் 80களில் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான்களான ஜோயல் கார்னர், விவியன் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ் ஆகியோரை விட மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் சர்வதேச வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இவர் ஆடவில்லை என்பதனால்  இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் இவரால் இடம்பெற முடியவில்லை.

  ஆனால் மிக அதிக வயது வரை கிரிக்கெட் போட்டியில் ஆடிய வீரர் என்ற பட்டியலில் இவருக்கு எப்போதும் இனி முதல் இடம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

  சுமார் 60 வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இவர் 7000 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உயரிய கட்டத்தில் இருக்கையில் ஐந்து சீசன்களில் சுமார் 500 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் சாதனையையும் படைத்துள்ளார். அதாவது இவர் வீசிய ஒவ்வொரு 27 பந்திற்கும் ஒரு விக்கெட் எனும் வீதத்தில் இவர் ஆடி இருக்கிறார் என்பது மிகப் பெரும் சாதனையை. 

  cecil wright

  இவர் குறித்து பேசிய பைபில் விஸ்டன், “தற்போது வரை இவருக்கு வயதாகி விட்டது என கூறவே இயலாது” என பதிவிட்டு இருந்தார். 

  அதாவது, அந்த அளவிற்கு 80 வயதிலும் திடகாத்திரமாக பந்து வீசி வருகிறார் என்றார். 

  தனது 85வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்த சிசில் ரைட் கூறுகையில்,இந்த ஆரோக்கியமான உடல் நிலைக்கான காரணம், எனக்கு தற்போது வரை மது அருந்தும் பழக்கம் கிடையாது. ஆனால் இதை சாப்பிட வேண்டும், அதை சாப்பிட வேண்டும் என குறிப்பிட்டு சாப்பிடாமல் அனைத்தையும் சாப்பிடுவேன். அதற்கு ஏற்றார் போல் உடற்பயிற்சி செய்கிறேன். 

  காயம் ஏற்படும் நேரத்தை தவிர நான் மற்ற நேரங்களில் முற்றிலுமாக ஓய்வு எடுப்பதை தவிர்ப்பேன். ஒரு நிமிடம்கூட டிவி பார்ப்பதற்கு என்று அமர்ந்தது கிடையாது. அப்படி செய்தால் அது என்னை சோம்பேறி ஆக்கி விடும். ஆதலால், உடல் வலிமை இல்லாதவன் ஆகிவிடுவேன் என நம்புகிறவன் நான். இந்த பழக்கவழக்கங்களால் தான் இத்தனை வருடங்கள் என்னால் கிரிகெட்டில் பயணிக்க முடிந்திருக்கிறது என்றார்.

  cecil wright

  இவர் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி முதல் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற இருக்கிறார். 

  இத்தனை வருடங்கள் கிரிக்கெட் ஆடிய இவருக்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.