8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொலை!

  8
  சிறுமி

  பீகாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் மருத்துவர் பிரியங்காவை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வடு மறைவதற்குள் அடுத்து இதேபோன்று ஓர் சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. 

  child abuse

  பக்சார் மாவட்டம் குகுதா கிராமத்தில் 8 வயது மதிப்புதக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அந்த சிறுமி அதே கிராமத்தை சேர்ந்தவரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.