8 வயது  சிறுமி பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர் கைது! 

  0
  8
  மஜம் அலி

  சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாமை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் என்னும் பகுதியில் வசித்து வரும் சுந்தரம் என்பவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த சிறுமியின் பெயர் கிருத்திகா. இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாகத் தனது நண்பர்களுடன் கிருத்திகா விளையாடச் செல்வாராம். அதே போல, நேற்று முன்தினமும் விளையாட சென்றதாக கூறப்படுகிறது . ஆனால், வெகு நேரம் ஆகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கிருத்திகாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுமியின் உடல் முட்புதரில் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்குச் சென்ற போலீசார் கிருத்திகாவை அரைநிர்வாணமாக கண்டெடுத்தனர். அப்போது கிருத்திகா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

  sexual Abuse

  இந்த கொடூர சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இதுதொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6  பேரிடம் 3 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் மஜம் அலி என்பவர் தான் குற்றவாளி என்பது தெரியவந்தது, இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.