8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை.. 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

  16
  Rain

  பருவ மழை துவங்குவதற்கு ஒரு நாள் முன்னரே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 17 ஆம் தேதி துவங்கியது. பருவ மழை துவங்குவதற்கு ஒரு நாள் முன்னரே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு முன் சற்று குறைவாக இருந்த பருவ மழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதனால், திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு மாவட்டங்களிலும் நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. 

  Rain

  இந்நிலையில், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழையின் காரணமாக இரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். 

  Leave