8 மாத குழந்தையை சுவற்றில் அடித்தே கொன்ற கொடூர தந்தை: நடுங்க வைக்கும் பின்னணி!

  0
  2
  சின்னபுள்ளையா

  அவரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.

  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னபுள்ளையா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ரமா  தேவி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

  crime

  இந்நிலையில் இரண்டாவது மனைவி மீதும் சந்தேகப்பட்டு வந்த சின்னபுள்ளையா மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி  மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட  அவர் மனைவியை அடித்து துவைத்துள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காமல்  மூர்க்கத்தனமாக 8 மாத குழந்தையை சுவற்றில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.

  baby

  இதை கண்ட ரமாதேவி கதறி அழ, அவரை சரமாரியாக மீண்டும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார் சின்னபுள்ளையா. இதுகுறித்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து  அதிர்ந்து போயுள்ளனர். மேலும் காயமடைந்த ரமாதேவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய சின்னபுள்ளையாவை தீவிரமாகத் தேடி வருவது  குறிப்பிடத்தக்கது, சந்தேகத்தால் ஏற்கனவே முதல் மனைவியை கொன்ற சின்னபுள்ளையா தற்போது குழந்தையை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.