8ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை! நாளை தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்!

  0
  1
   வேலை வாய்ப்பு முகாம்

  படிப்புக்கேற்ற வேலையில்லை என்று ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்கு போல எந்த வேலைக்கும் போகாதவர்களுக்கும் கூட வேலை கிடைப்பதற்கான சூழல் நிலவி வருகிறது. வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற மனசும், முயற்சியும் வேண்டும். அரசாங்க வேலை தான் வேண்டும் என்று காத்திருக்காமல் முயற்சி செய்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.  தனியார் நிறுவனங்களில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான ஆட்களை வேலை வாய்ப்பு முகாம் மூலமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நேர்காணல் செய்து தேர்ந்தெடுக்கிறார்கள்.

  placement

  இதற்காக உங்கள் பகுதியின் அருகில் இருக்கும் வேலை வாய்ப்பு அலுவலகங்களைத் தேடிச் சென்றாலே போதும். நாளை இந்த வேலைவாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் நடத்தப்படும் இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 

  placement camp

   சென்னையில் ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் எட்டாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம். ஐடிஐ பாலிடெக்னிக் படித்தவர்களும் கலந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.