790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது?

  0
  4
  கேடிஎம் டியூக்

  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் 790 சிசி திறன் கொண்ட டியூக் பைக்க்குகள் வெளியாகும் தேதியை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் பைக்குகளுக்கு தனி வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வெளிப்புற வடிவமைப்பிலும் எஞ்சினிலும் புதுப்புது மாற்றங்கள் கேடிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது. 

  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் நிறுவனத்தின் 790 சிசி திறன் கொண்ட டியூக் பைக்க்குகள் வெளியாகும் தேதியை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  KTM

  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கேடிஎம் பைக்குகளுக்கு தனி வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வெளிப்புற வடிவமைப்பிலும் எஞ்சினிலும் புதுப்புது மாற்றங்கள் கேடிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு வருகிறது. 

  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 790 சிசி திறன் கொண்ட கேடிஎம் டியூக் பைக்குகள் விரைவில் வெளியாக இருக்கிறது என தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு கேடிஎம் நிறுவனம் எந்தவித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வந்தது. 

  இதற்கிடையில் நேற்று 790 சிசி பைக்குகள் இந்தியாவில் வருகிற 23-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக பெருநகரங்களில் உள்ள டீலர்களுக்கு வழங்கப்பட்டு விற்பனை தொடரும். முன்பணமாக ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே செலுத்தி எடுத்துச் செல்லலாம் என்பதையும் அந்நிறுவனம் வெளியிட்டது.

  KTM

  கேடிஎம் 790 சிசி டியூக் பைக்குகள் சிறப்பம்சம்

  1. பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்ட 799 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்.

  2. 104 பிஎச்பி பவர், 87 என்எம் டார்க் திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்.

  3. 2 வே குயிக் ஷிஃப்ட் வசதி, ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி.

  4. ஸ்போர்ட்ஸ், ஸ்ட்ரீட், ரெயின் மற்றும் டிராக் – 4 டிரைவிங் மோட்

  5. லீன் ஆங்கிள் சென்சிட்டிவிட்டி மற்றும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

  6. 43 மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர்.

  7. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்.
  8. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்.