Home தமிழகம் 7 வருடங்களாக கேட்டும் கிடைக்காத கழிவறை வசதி – விரக்தியில் தற்கொலை!

7 வருடங்களாக கேட்டும் கிடைக்காத கழிவறை வசதி – விரக்தியில் தற்கொலை!

0
7 வருடங்களாக கேட்டும் கிடைக்காத கழிவறை வசதி – விரக்தியில் தற்கொலை!

திருமணம் முடிந்த நாளிலிருந்தே வீட்டில் கழிவறை வேண்டும் என ஷாலினி வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனாலும் 7 வருடங்களாக ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிகழித்திருக்கிறார் சசிகுமார். கழிவறை கட்டித்தராத பிரச்னை கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிதாக வெடிக்கவே, மனமுடைந்த ஷாலினி, அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜோக்கர் திரைப்படம் தெரியுமா? நம்ம ரம்யா பாண்டியன் கதாநாயகியாக மல்லிகா என்ற உயிரோட்டமுள்ள பாத்திரத்தில் நடித்தப் படம். அப்படத்தில் மனதுக்கு விருப்பமானவனை திருமணம் செய்வதற்கு தடையாக அவன் வீட்டில் கழிவறை இல்லாதது என்பதாகவும், ஒருவழியாக பல்வேறு கமிஷன்களுக்குப் பிறகு கழிவறை அரைகுறையாக கட்டிமுடிக்கப்படும்போது அது இடிந்து மல்லிகாமேல் விழுந்து அவரை முடக்குவதாகவும் கதைபோகும். மல்லிகா கதையல்ல, நிஜம் என்பதாக ஒரு சோகம் நெல்லை வள்ளியூர் அருகே நிகழ்ந்துள்ளது. களக்காடுபக்கம் சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஷாலினி சசிகுமார் தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

Joker movie on the importance of toilet for every home

திருமணம் முடிந்த நாளிலிருந்தே வீட்டில் கழிவறை வேண்டும் என ஷாலினி வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனாலும் 7 வருடங்களாக ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிகழித்திருக்கிறார் சசிகுமார். கழிவறை கட்டித்தராத பிரச்னை கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிதாக வெடிக்கவே, மனமுடைந்த ஷாலினி, அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கணவன் வீட்டார் தெரிவிக்கின்றனர். இந்தக்கதையை ஏற்காத பெண் வீட்டார், ஷாலினியை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்றுவிட்டதாக போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட அரசு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இப்போது வழக்கு செலவுக்காக எத்தனை லட்சம் சசிகுமார் குடும்பத்தினர் செலவழிக்கப் போகிறார்களோ? பணம் கிடக்கட்டும், போன உயிர்?

Open

ttn

Close