7 வயது சிறுவன் கேட்டது ஆஸி கேப்டனிடம்… நிறைவேற்றியது விராட் கோஹ்லி

  0
  2
  archieschiller

  ஆஸ்திரேலியா டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என அந்த அணியின் இணை கேப்டன் ஆர்ச்சி சில்லர் விருப்பம் தெரிவித்தார்

  மெல்போர்ன்: இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என அந்த அணியின் இணை கேப்டன் ஆர்ச்சி சில்லர் விருப்பம் தெரிவித்தார்.

  இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் 15-வது வீரராக இதய நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டார். அணியின் கௌரவ இணைக் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

  டாஸ் போடுவதற்கு முன், கேப்டன் பெய்னிடம் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது என ஆர்ச்சி சில்லர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் டாஸில் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்படியோ ஆர்ச்சி சில்லரின் விருப்பம் நிறைவேறியது.