6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

  0
  14
  huawei

  இந்தியாவில் ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  டெல்லி: இந்தியாவில் ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் குறித்த டீச்சர் அண்மையில் அமேசான் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹுவாய் நிறுவனம் ஜன.7-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

  இதன்மூலம் ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜன.7-ஆம் தேதி அன்று வெளியாகும் என்ற தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அமேசான் இந்தியா இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக விற்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

  ஹுவாய் ஒய்9 (2019) ஸ்மார்ட்போனில் நாட்ச் கொண்ட 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, டுயல் ரியர் கேமரா (13 எம்.பி + 2 எம்.பி, எல்.இ.டி ஃபிளாஷ்) மற்றும் டுயல் செல்பி கேமராக்கள் (16 எம்.பி + 2 எம்.பி), ஏ.ஐ தொழில்நுட்பம், கிரின் 710 பிராசஸர், ஜி.பி.யு டர்போ, விரல்ரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, புளூடூத், வைஃபை, டுயல் சிம் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.