6 விருதுகள், ரூ.720 கோடி ஒப்பந்தத்துடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார்!

  0
  1
  OPS

  தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக இம்மாதம் 7-ந் தேதி புறப்பட்டு சென்றார்.

  தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக இம்மாதம் 7-ந் தேதி புறப்பட்டு சென்றார். சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார்.

  OPS

  அமெரிக்காவில், சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் அவருக்கு தமிழ்மகன் விருது வழங்கப்பட்டது. மேலும் ரூ.720 கோடி முதலீடுகள் திரட்டுவதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்கு தன் சொந்த பங்காக ரூ.7 லட்சம் ரூபாயை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். 

  OPS

  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அமெரிக்க பயணத்தின் அவருக்கு 6 விருதுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியூயார்க்கில், உலக தமிழ் இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, தொழில்களுக்கான களமாக தமிழகத்தை தேர்வு செய்யுங்கள், உங்கள் முதலீடுகளை தமிழகத்திலே செய்யுங்கள் என்று கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள், புதிய தொழில் தொடங்கும் உங்களுடைய புதுமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் அரங்கேற்றுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக இருக்கிறது என்று பேசினார்.

  OPS

  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் 10 நாள் அமெரிக்க பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று, திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் சென்னை வருகிறார்.