6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

  0
  6
  World Cup 2019

  தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 230 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 228 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டேவிட் மில்லர் 31 ரன்ககளும், வான்டெர் டுசன் 22 ரன்களும் எடுத்த நிலையில், வெளியேறினர். கேப்டன் ஃபாப் டு பிளசிஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் 4வது விக்கெட்டாக வெளியே அனுப்பப்பட்டார். இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 227 ரன்கள் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற 228 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.

  இதையடுத்து இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ஷிகர் தவான் 8 ரன்களில் ரபாடா ஓவரில் வெளியேறினார்.  உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார் ரோஹித் ஷர்மா. விராட் கோலி 18 ரன்களில் பெலுக்வாயோ பந்தில் அவுட் ஆகினார். ஒருவழியாக தென்னாப்பிரிக்க நிர்ணயித்த இலக்கை இந்தியா வெற்றிகரமாக விளையாடி வென்றது.