6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்!

  0
  12
  ஆனந்திபென் படேல்

  உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

  தற்போதைய கவர்னர்கள் ஆனந்திபென் படேல் (மத்திய பிரதேசம்), லால்ஜி தான்டன் (பீகார்) ஆகியோர் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் சில மாநிலங்களுக்கு புதிய நபர்கள் கவர்னர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  லால்ஜி தான்டன்

  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து மாநிலத்துக்கு புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகா பேச்சுவார்த்தையில் முன்னாள் தகவல்தொடர்பாளராக இருந்தவர்தான் இந்த ஆர்.என். ரவி.

  பிரபல வக்கீலும், முன்னாள் ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜக்தீப் தங்கர் மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.  மத்திய பிரதேச கவர்னராக இருக்கும் ஆனந்திபென் படேல் உத்தர பிரதேச கவர்னராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  ஆர்.என். ரவி

  தற்போது பீகார் கவர்னராக இருக்கும் லால்ஜி தான்டன் மத்திய பிரதேச கவர்னராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பீகார் கவர்னராக பகு சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரமேஷ் பயாஸ் திரிபுரா கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஷ்டிரபதி பவன் மாளிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.