54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொலை குற்றங்கள் குறைந்து போச்சு! ரிப்போர்ட் சொல்லுது!

  0
  3
  குற்றம்

  2017ம் ஆண்டில் நம் நாட்டில் கொலை விகிதம் 54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

  தேசிய குற்ற பதிவுகள் பிரிவு வெளியியிட்டுள்ள க்ரைம் இன் இந்தியா 2017 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017ல் நம் நாட்டில் குற்றமில்லாத கொலை உள்பட கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 2.49 பேர் என்ற அளவில் குறைந்துள்ளது. இருப்பினும் 1963ம் ஆண்டில் மட்டும் இந்த கொலை விகிதம் இதனை காட்டிலும் குறைவாக 2.34 சதவீதமாக இருந்தது.

  குற்றம்

  1992ல் படுகொலை விகிதம் உச்ச கட்டத்தில் இருந்தது. அந்த ஆண்டில் லட்சம் பேரில் 5.15 படுகொலை சம்பவங்களால் உயிரை இழந்தனர். அந்த ஆண்டில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 12,287 படுகொலை மற்றும் குற்றமில்லாத கொலைகள் அரங்கேறியது. அதற்கு அடுத்து பீகார் (5,743), மத்திய பிரதேசம் (3,753), மகாராஷ்டிரா (3,338) மற்றும் ஆந்திரா (2,841) மாநிலங்களில் படுகொலை சம்பவங்கள் நடந்தது.

  குற்ற சம்பவம்

  ஆனால் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் கொலை விகிதம் படிப்படியாக குறைந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளது. அதே கால கட்டத்தில் மக்கள் தொகை அந்த மாநிலங்களில் அதிகரித்துள்ளபோதிலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017ல் சென்னையில் கொலை சம்பவங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டில் 154 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டில் 133 பேர் மட்டுமே படுகொலைக்கு ஆளாகினர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.