5 நிமிடத்தில் கள்ளச்சாராய கும்பலை சிக்க வைத்த சிறுவர்கள்: ஆச்சர்யத்தில் காவல் துறை!

  0
  3
  Kids met S.P Smith singh

  ந்த சிறுவர்கள் மூவரும், தங்கள் பகுதியில் கள்ளச் சாராய கும்பலை பிடிக்க அப்பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி யாக பதவியை அளித்துள்ளனர். அதனால், வெகு நாட்களாக சிக்காத அந்த கள்ளச் சாராய கும்பலை காவல்துறை பிடித்தது.

  மத்திய பிரதேச மாநிலம், ஜாபல்பூர் பகுதியில் காவல் துறை சிறப்பு அதிகாரிகள் என்ற திட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளது. அதன் படி, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு பேரிடர் மீட்பு உள்ளிட்ட காவல் துறை சம்பந்தமான அனைத்தையும் தகவல்களையும் கற்றுக் கொடுத்து வருகின்றனர். 

  Police training for kids

  அம்மாணவர்கள் 40 பேரும் பயிற்சியின் ஒரு பகுதியாக, எஸ்.பி ஸ்மித் சிங்கை சந்திக்க வந்துள்ளனர். அப்போது யாருக்கெல்லாம் எஸ்.பி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று ஸ்மித் சிங் கேட்டுள்ளார். அதற்கு  மூன்று மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்ததால் அவர்களுக்கு 5 நிமிடம் எஸ்.பியாக பணியாற்றலாம் என்ற வாய்ப்பை அளித்துள்ளார். அப்போது அந்த சிறுவர்கள் மூவரும், தங்கள் பகுதியில் கள்ளச் சாராய கும்பலை பிடிக்க அப்பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி யாக பதவியை அளித்துள்ளனர். 

  Police training for kids

  அதனால், வெகு நாட்களாக சிக்காத அந்த கள்ளச் சாராய கும்பலை காவல்துறை பிடித்தது. மேலும், அந்த சிறுவர்கள் லஞ்சம் வழங்கும் சிலரையும் காட்டிக் கொடுத்துள்ளனர். சிறுவர்களின் இச்செயல் காவல்துறையினரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.