5 நாளில் ரூ.3.58 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….சென்செக்ஸ் 100 புள்ளிகள் இறங்கியது…….

  0
  1
  பங்கு வர்த்தகம்

  கடந்த 5 வர்த்தக தினங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 100 புள்ளிகள் இறங்கியது.

  கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் சென்ற வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய சந்தித்தது. ஆனால் அதன் பிறகு வந்த 3 வர்த்தக தினங்களும் பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. கடைசி வர்த்தக தினமான நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பெரிய ஏற்றத்தை தொட்டு விட்டு மளமளவென சரிவு கண்டது.

  கொரோனா வைரஸ்

  நேற்று பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.112.51 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.58 லட்சம் கோடியை இழந்தனர். 

  பங்கு வர்த்தகம் சரிவு

  கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 வர்த்தக தினங்களில்  மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.39 புள்ளிகள் இறங்கி 29,815.59 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 85.20 புள்ளிகள் சரிந்து 8,660.25 புள்ளிகளில் நிலைகொண்டது.