5ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வானிலை தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்- ஆய்வாளர்கள்

  0
  9
  5G

  5 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் அடிமைகளும் அதனை அறிமுகப்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று  வெளியாகியுள்ளது. 

  5 ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் அடிமைகளும் அதனை அறிமுகப்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று  வெளியாகியுள்ளது. 

  இந்தியாவில் தற்போது 4G இணைய வேகம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது . கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4G சேவையை வழங்குகின்றன. அடுத்தகட்டமாக 5G சேவையினை இந்தியாவில் கொண்டுவர சோதனைகள் தொடங்கப்போகின்றன. ஐந்தாம் தலைமுறை தகவல்தொழில்நுட்பம் வந்தால் இணைய வேகம் அதிகரிக்கும். அதாவது மொபைலில் பயன்படுத்துகின்ற இணைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகவும் , வீடுகளில் பயன்படுத்துகின்ற அதிவேக பிராட்பேண்ட் வேகத்தை விட 100 மடங்கு வேகத்துடன் செயல்படும். 

  இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டால் காலநிலைகளை கணிப்பதில் சிக்கல் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது வானிலை தகவல்களை வழங்கும் செயற்கைக்கோள்களின் அலைக்கற்றைகளை 5ஜி அலைக்கற்றைகள் குறுக்கீடு செய்யும் எனவும் இதனால் காலநிலையை தீர்க்கமாக கணிக்க முடியாது எனவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக Federal Communications Commission (FCC) அமைப்பிற்கு அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பாளர்கள் கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளனர்.