5ஜி ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் 8 சீரீஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

  0
  10
  oneplus

  5ஜி ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் 8 சீரீஸ் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  பெய்ஜிங்: 5ஜி ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் 8 சீரீஸ் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் சீரீஸ் ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் திங்களன்று அறிவித்துள்ளது. ஆன்லைனில் இந்த நிகழ்வு இரவு 8:30 மணிக்கு ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனலில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும்.

  இந்த ஸ்மார்ட்போன் சீரீஸ் 5ஜி இணைப்பை ஆதரிக்கும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. ஒன்பிளஸ் 8 சீரிஸில் ‘ஒன்பிளஸ் 8 ப்ரோ’ மற்றும் ‘ஒன்பிளஸ் 8 ஆகிய சாதனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஸ்மார்ட்போன்கள் அல்லது புரோ வேரியண்டில் மட்டுமே கிடைக்குமா என்பது நிச்சயமற்றது.