48 எம்.பி பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

  0
  5
  redmi note 7

  சீனாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  பெய்ஜிங்: சீனாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  ரெட்மி பை சியோமி என்ற புதிய சப் பிராண்டை சியோமி நிறுவனம் தொடங்கிய பின்பு அந்நிறுவனம் கீழ் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 48 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை அமைந்துள்ளன.

  மற்ற சிறப்பம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி/4 ஜிபி/6 ஜிபி ரேம் வகைகள், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வகைகள், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம், 48 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர் சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, குயிக் சார்ஜ் 4 அம்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

  விலை விபரம்:

  3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் – 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,390)

  4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் – 1199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,460)

  6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் – 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,540)

  புதிய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் ஆகிய மூன்று விதமான நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.